Friday, January 21, 2011

முதல் மாராடு படுகொலை: ஹிந்து ஐக்கியவேதி தலைவர் உள்பட மூன்று பேர் குற்றவாளிகள்

கோழிக்கோடு,ஜன.21:முதல் மாராடு படுகொலை சம்பவத்தில் குஞ்சுக்கோயா(வயது 32) என்பவரைக் கொலைச்செய்த வழக்கில் ஹிந்து ஐக்கியவேதி மாநில பொதுச் செயலாளரும் மாராடு ஆரியசமாஜம் முன்னாள் செயலாளருமான சுரேஷ் உள்பட 3 பேர் குற்றவாளிகள் என மாராடு சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. இன்று குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிக்கப்படும்.

கடந்த 2002 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரவு எட்டு மணியளவில் மாராடு கடற்கரைப் பகுதியில் இரு பிரிவினர்களுக்கிடையே நடைப்பெற்ற மோதலில் ஐந்துபேர் கொல்லப்பட்டிருந்தனர்.

கேரள மாநிலத்தையே அதிர்ச்சியில் உறையவைத்த இச்சம்பவத்தில் முதலில் கொல்லப்பட்டது முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்த குஞ்சுக்கோயா என்பவராவார்.

மாராடு ஜும்ஆ முன்பக்கத்தில் வைத்து ஆயுதங்களுடன் வந்த ஹிந்துத்துவ பயங்கரவாதிகளான ஹிந்து ஐக்கியவேதியின் பொதுச்செயலாளர் சுரேஷ் உள்பட பலர் சேர்ந்து குஞ்சுக்கோயாவை கொடூரமாக கொலைச் செய்தனர். இதனை நேரில் கண்ட சாட்சி அளித்த வாக்குமூலத்தை மிக முக்கிய ஆதாரமாக நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இவ்வழக்கில் இதர குற்றவாளிகள் பிபிஷ்(வயது 37), விஜேஷ்(வயது 31) ஆகியோராவர்.

முதல் மாராடு சம்பவத்தில் ஐந்துபேர் கொல்லப்பட்டிருந்தனர். இதற்கு பதிலடியாக நடந்த இரண்டாவது மாராடு சம்பவத்தில் 9பேர் கொல்லப்பட்டிருந்தனர். சுரேஷ் தற்பொழுது ஜாமீனில் உள்ளார். இவ்வழக்கில் முதல் குற்றவாளியான பிபிஷ் என்பவர் முதல் மாராடு சம்பவத்திற்கு பிறகு அபூபக்கர் என்பவரைக் கொலைச்செய்த வழக்கில் தண்டனையை சிறையில் அனுபவித்து வருகிறார்.
செய்தி:பாலைவனதூது 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza