Friday, January 21, 2011

திருக்குர்ஆன் பிரதிகளை எரிக்க அழைப்புவிடுத்த டெர்ரி ஜோன்ஸிற்கு பிரிட்டனில் தடை

லண்டன்,ஜன.21:திருக்குர்ஆனின் பிரதிகளை எரிக்க அழைப்புவிடுத்த அமெரிக்காவில் கிறிஸ்தவ பாதிரி டெர்ரி ஜோன்ஸிற்கு பிரிட்டன் தடை விதித்துள்ளது.

பொதுநலத்தை கவனத்தில் கொண்டு பிரிட்டனில் நுழைய டெர்ரி ஜோன்ஸிற்கு தடை விதித்துள்ளதாக பிரிட்டனின் உள்துறை அமைச்சக அலுவலகம் அறிவித்துள்ளது.

மில்டன் கெய்ன்ஸில் தீவிர வலதுசாரி அமைப்பு ஒன்று ஏற்பாடுச் செய்துள்ள நிகழ்ச்சியில் உரை நிகழ்த்த டெர்ரி ஜோன்ஸிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

பிரிட்டன் அரசு எல்லாவகை தீவிரவாதங்களையும் எதிர்ப்பதால் டெர்ரி ஜோன்ஸிற்கு தடை விதித்துள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

பிரிட்டனின் தீர்மானத்திற்கெதிராக நீதிமன்றத்தை அணுகப் போவதாக ஜோன்ஸ் அறிவித்துள்ளார்.
செய்தி:பாலைவனதூது

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza