Tuesday, February 1, 2011

அல்ஜஸீரா தொலைக்காட்சி சேனலின் உபகரணங்கள் பறிமுதல்

கெய்ரோ,பிப்.1:எகிப்து நாட்டில் நடந்துவரும் மக்கள் திரள் போராட்டத்தை தொடர்ந்து ஒளிபரப்பிவரும் அல்ஜஸீரா தொலைக்காட்சிக்கு அந்நாட்டு அரசு தடை விதித்திருந்தது. ஆனால், அதனையும் மீறி அல்ஜஸீரா எகிப்து நாட்டில் செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் அல்ஜஸீரா தொலைக்காட்சியின் 6 செய்தியாளர்களை எகிப்து அரசு கைதுச் செய்தது. பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால், அவர்களிடமிருந்து கேமரா உள்பட உபகரணங்களை எகிப்து நாட்டு ராணுவம் பறிமுதல் செய்துள்ளது.

எகிப்து அரசின் இத்தகைய நடவடிக்கைகள் மூலம் உண்மையை வெளிக்கொணரும் எங்களுடைய நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என அல்ஜஸீரா செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

நைல்ஸாட் மூலமாக அல்ஜஸீரா ஒளிபரப்புவதை எகிப்து அரசு தடைச் செய்திருந்தது. எகிப்து ரேடியோ மற்றும் தொலைக்காட்சிக்கு உரிமையானதுதான் நைல்ஸாட். அதேவேளையில், பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கும் எகிப்து அதிகாரிகளின் நடவடிக்கையை இண்டர்நேசனல் ப்ரஸ் இன்ஸ்ட்யூட் கண்டித்துள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்-

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza