Wednesday, January 19, 2011

ஸ்பெயின்:புர்காவுக்கு தடையை நிறுத்திவைத்த நீதிமன்றம்

மாட்ரிட்,ஜன.19:ஸ்பெயின் நாட்டின் வட கிழக்கு பகுதியிலுள்ள நீதிமன்றம் ஒன்று லீடா நகரத்தில் அமுல்படுத்தப்பட்ட புர்கா அணிவதற்கான தடையை நிறுத்திவைத்துள்ளது.

ஸ்பெயின் நாட்டில் முதன்முறையாக லீடா நகரில் நகராட்சி அலுவலகங்களில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவது பாரபட்சமானது எனக் குற்றஞ்சாட்டி புர்கா அணிவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து முஸ்லிம் அமைப்பு ஒன்று நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. இம்மனுவின் மீதான விசாரணையின் முடிவில் தடையை நிறுத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
செய்தி:பாலைவனதூது

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza