Wednesday, January 19, 2011

மாற்றியமைக்கப்பட்டது அமைச்சரவை! 3 பேருக்கு கேபினட் அந்தஸ்து

புதுடெல்லி: மத்திய அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்பட்டது. இதில் 3 இணையமைச்சர்கள் கேபினெட் அமைச்சர்களாக குடியரசுத்தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
பிரபுல் பட்டேல் கனரக தொழில்கள், அரசு நிறுவனங்கள் துறையும் ஜெய்ஸ்வால் நிலக்கரித்துறை அமைச்சராகவும் சல்மான் குர்ஷித்துக்கு நீர்வளம் மற்றும் சிறுபான்மை நலத்துறையும் வழங்கப்பட்டுள்ளது. இணை அமைச்சர்களாக மூன்று பேர் பொறுப்பேற்றனர். அஜய் மக்கன் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை இணையமைச்சராகவும் வேணிபிரசாத் வர்மா உருக்குத்துறை இணையமைச்சராகவும் பொறுப்பேற்றனர்.  கே.வி.தாமசுக்கு உணவு மற்றும் பொது விநியோகத்துறை வழங்கப்பட்டுள்ளது.
அஸ்வினி குமாருக்கு திட்டம், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது இவர் திட்டம், பார்லிமென்ட் விவகாரம், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புவியியில் துறைகளை கவனிப்பார். மின்சாரத்துறை இணையமைச்சர் பொறுப்பு கே.சி.வேணுகோபாலுக்கு அளிக்கப்பட்டுள்ளது. மின்சாரத்துறை இணை மத்திய நகர்ப்புறத்துறை அமைச்சராக இருந்த ஜெய்ப்பால் ரெட்டி பெட்ரோலியத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.  பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்த தியோரா நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சராக மாற்றப்பட்டார்.
தகவல் தொழில்நுட்பத்துறை தொடர்ந்து கபில்சிபல் வசமே உள்ளது. வேணுகோபால் மின்துறையை கவனிப்பார். மத்திய விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த எம்.எஸ். கில் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சரானார்.
செய்தி  :பாலைவனதூது

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza