Saturday, November 27, 2010

ஒபாமா முஸ்லிமாக மாறவேண்டுமென ஹஜ்ஜின்போது பிரார்த்தித்தேன் - பாட்டி ஸாரா உமர்

ஜித்தா,நவ.27:அமெரிக்க அதிபர் ஒபாமா இஸ்லாத்தை தழுவவேண்டுமென புனித ஹஜ்ஜின் வேளையில் பிரார்த்தித்ததாக அவருடைய பாட்டியான ஸாரா உமர் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபிய பத்திரிகையான அல்வதனுக்கு அளித்த பேட்டியில்தான் அவர் இதனை தெரிவித்தார்.

மகனும், ஒபாமாவின் மாமாவுமான ஸஈத் ஹுசைன் உள்பட நான்கு பேரப்பிள்ளைகளுடன் 88 வயதான ஸாரா உமர் ஹஜ் புனித கடமையை நிறைவேற்ற மக்காவுக்கு வருகைத் தந்திருந்தார்.

ஒபாமாவின் குடும்பத்தினர் சவூதி அரேபிய அரசின் விருந்தினர்களாக கெளரவிக்கப்பட்டனர். தங்களை சிறப்பாக கெளரவித்ததற்கு ஒபாமாவின் பாட்டி சவூதி மன்னர் அப்துல்லாஹ்விற்கு நன்றி தெரிவித்தார்.

பாரக் ஒபாமா முஸ்லிம் என அமெரிக்காவில் ஐந்தில் ஒருபகுதியினர் நம்புவதாக சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பில் தெரியவந்தது. ஆனால், இதனை வன்மையாக எதிர்க்கும் வெள்ளை மாளிகை வட்டாரங்கள் ஒபாமா கிறிஸ்தவர்தான் என கூறுகிறது.

செய்தி:மாத்யமம்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza