Tuesday, November 23, 2010

எகிப்து எல்லையில் இஸ்ரேல் மின்வேலி அமைக்கிறது

டெல்அவீவ்,நவ.23:இஸ்ரேலில் சட்டவிரோதமாக எகிப்து நாட்டு எல்லை வழியாக நுழைபவர்களை தடுப்பதாக கூறி இஸ்ரேல் எகிப்திய நாட்டு எல்லையில் 250 கிலோமீட்டர் நீளத்திற்கு நவீன கண்காணிப்பு தொழில்நுட்பங்கள் அடங்கிய மின்சார வேலியை அமைக்கவுள்ளது.

37.2 கோடி டாலர் செலவில் அமைக்க திட்டமிட்டுள்ள இவ்வேலி ஒருவருடத்தில் முடிவடையும் எனக் கருதப்படுகிறது.

ஆப்ரிக்காவிலிருந்து வருவோர் எகிப்து வழியாக இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக நுழைவதாக கூறப்படுகிறது. கடந்த வருடங்களில் எகிப்திய எல்லைப் படை இவ்வாறு நுழைபவர்களை சுட்டுக் கொன்றது. ராணுவத்தின் எச்சரிக்கையை இவர்கள் மீறி உள்ளே நுழைய முற்பட்டதால் சுட்டதாக கூறப்படுகிறது.

இஸ்ரேல் மற்றும் யூதர்களுக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது. இதனை களையவே இந்த வேலி அமைக்கப்படுவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவிக்கிறார்.

வாரத்திற்கு 700 பேர் வீதம் இஸ்ரேலுக்குள் எல்லை வழியாக நுழைவதாக குடியேற்ற அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஹாரட்ஸ் என்ற இஸ்ரேலிய பத்திரிகை இம்மாத துவக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.

2010 ஜனவரி முதல் நவம்பர் வரை 10858 பேர் இஸ்ரேலுக்குள் நுழைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. 2009 ஆம் ஆண்டில் 4341 பேர் மட்டுமே எல்லை வழியாக நுழைந்துள்ளனர்.

இத்தாலியும், லிபியாவும் 2009 ஆம் ஆண்டு உருவாக்கிய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஐரோப்பாவை நோக்கிய் ஆப்ரிக்க குடியேற்றக்காரர்களின் கடல் மார்கம் தடைச் செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேலுக்குள் நுழைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சிறந்த வேலைத்தருவதாக வாக்களித்து சில நிறுவனங்கள் இவர்களை இஸ்ரேலுக்குள் அனுப்புகின்றனர் என கூறப்படுகிறது.
செய்தி:பாலைவனதூது

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza