Thursday, November 25, 2010

தாலிபான்கள் சரியான இஸ்லாமிய கொள்கைகளை பின்பற்றுகிறார்கள்: பாக்.அமைச்சர்

இஸ்லாமாபாத்,நவ.25:இஸ்லாமிய கொள்கைகளை சரியான முறையில் தாலிபான்கள் பின்பற்றுகிறார்கள் என பாகிஸ்தானின் சுற்றுலாத்துறை அமைச்சர் மவ்லானா அத்தாவுர்ரஹ்மான் கூறியுள்ளார்.

அமெரிக்காதான் உலகின் மிகப்பெரிய பயங்கரவாதி. இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் மற்றும் தாலிபான்களுக்கெதிராக அமெரிக்கா துவேசத்தை வளரச்செய்கிறது. அமெரிக்காவும், இதர உலக நாடுகளும் முஸ்லிம்களுக்கு சம உரிமைகளையும், ஆதரவும் அளிக்காதவரை மேற்கத்திய சக்திகள் கூறும் தீவிரவாதத்திற்கு முடிவு ஏற்படாது.

தாலிபான்களும், இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும் பல்வேறு மதங்களுக்கிடையேயான ஐக்கியத்தை எதிர்ப்பவர்கள் என்பது தவறான புரிந்துணர்வாகும். சமுதாய ஐக்கியத்திற்கு எதிராக நிற்பது அமெரிக்காவாகும். உலகத்தின் ஏகாதிபத்தியத்தை நிலைநிறுத்த அவர்கள் முயற்சிக்கின்றார்கள்.

கைபர் மாகாணத்தில் நடந்த பொது நிகழ்ச்சியொன்றில் உரை நிகழ்த்தவே மவ்லானா அத்தாவுர்ரஹ்மான் இதனை தெரிவித்தார்.

வஸீரிஸ்தான் பகுதியில் தாலிபான் போராளிகளுக்கெதிராக பாகிஸ்தான் ராணுவம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
செயதி:பாலைவனதூது 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza