பெங்களூர்,நவ:வருகிற டிசம்பர் 6 ஆம் தேதி முதல் ஜனவரி 30ஆம் தேதி வரை 'பாப்ரி மஸ்ஜித் நீதியைத் தேடுகிறது' என்ற பிரச்சாரத்தை இந்தியா முழுவதும் நடத்த பெங்களூரில் கூடிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர்கள் மற்றும் செயலாளர்களின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களாவது: டிசம்பர் 6 ஆம் தேதியும், ஜனவரி 30 ஆம் தேதியும் இந்திய வரலாற்றில் மறக்கமுடியாத தினங்களாகும்.
1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி ஹிந்துத்துவா பாசிசத்தின் ஏஜண்டுகள் மகாத்மா காந்திஜியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
டிசம்பர் 6-ஆம் தேதி அதே சக்திகள் பாப்ரி மஸ்ஜிதை தகர்த்தனர். டிசம்பர் 10 ஆம் தேதி 'பயங்கரவாத எதிர்ப்பு' தினமாக கடைப்பிடிக்கப்படும். இதன் ஒரு பகுதியாக 'பயங்கரவாதத்தோடு போராடுவோம்! மனித உரிமைகளை காப்போம்!' என்ற முழக்கத்துடன் கூடிய பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
பாப்ரி மஸ்ஜித் வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்சின் நீதியற்ற தீர்ப்பு மற்றும் பல்வேறு குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கை புலனாய்வு ஏஜன்சிகள் கண்டறிந்த சூழலில் இப்பிரச்சாரம் முக்கியத்துவம் பெறும்.
இப்பிரச்சாரத்தின் போது பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள், சுவரொட்டி பிரச்சாரங்கள், மடக்கோலை விநியோகம் ஆகியன நடைபெறும்.
பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட டிசம்பர் 6ஆம் தேதி மற்றும் காந்திஜி கொல்லப்பட்ட ஜனவரி 30 ஆம் தேதி ஆகிய தினங்களில் மதசார்பற்ற அமைப்புகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளுடன் இணைந்து சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
சோனியாகாந்திக்கு எதிராக தரக்குறைவான விமர்சனங்களைச் செய்த கு.சி.சுதர்சனின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. பயங்கரவாத தாக்குதல்களில் தங்களின் பங்கு வெட்டவெளிச்சமான சூழலில் அதிலிருந்து ஆர்.எஸ்.எஸ் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் கவனத்தை திசைத்திருப்ப இத்தகைய முறைகேடான வழிமுறைகளை கைக் கொள்கின்றனர்.
தங்களை நிர்பந்தத்தில் ஆழ்த்தி சுரண்ட நினைக்கும் சங்க்பரிவார சதித்திட்டங்களுக்கு முன்னால் தலைகுனிந்து விடாதீர்கள் என மத்திய அரசு மற்றும் காங்கிரஸ் கட்சியை கேட்டுக்கொள்கிறோம்.
1992 முதல் இந்தியாவில் நடைப்பெற்ற அனைத்துக் குண்டுவெடிப்புகளைக் குறித்தும் மறு விசாரணை நடத்த வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்தியுள்ளது.
இக்கூட்டத்திற்கு தேசிய தலைவர் இ.எம்.அப்துற் றஹ்மான் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் கெ.எம்.ஷெரீஃப் உரையாற்றினார்.
0 கருத்துரைகள்:
Post a Comment