Sunday, November 21, 2010

39 சதவீத அமெரிக்கர்களுக்கு திருமணம் புளித்துப் போய்விட்டது

வாஷிங்டன்,நவ.20:அமெரிக்கா திருமணத்தை மறந்துவிடுமா? என்றதொரு கேள்வி எழுந்துள்ளது.

இந்த சந்தேகத்திற்கு காரணம், சமீபத்தில் டைம் இதழுடன் இணைந்து அமெரிக்காவில் வியூ ரிசர்ச் செண்டர் நடத்திய ஆய்வில் 39 சதவீத அமெரிக்கர்களுக்கும் திருமணம் புளித்துப்போன பழங்கஞ்சியாக மாறிவிட்டது தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் பல்வேறு குடும்பங்களில் நடத்திய இந்த ஆய்வில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. பெற்றோர்களுடன் வாழும் 18 வயதிற்கு கீழான குழந்தைகளைக் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

ஆய்வில் 29 சதவீதம் பேர் திருமணம் முடிக்காத தாய் அல்லது தந்தையுடன் வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது. 39 சதவீத அமெரிக்கர்களும் திருமணத்தை பழைய கலாச்சாரமாக கருதுகின்றனர். 15 சதவீத குழந்தைகள் விவாகரத்துப் பெற்ற பெற்றோர்களுடன் வாழ்ந்து வருகையில் 14 சதவீத குழந்தைகள் திருமணம் முடிக்காத பெற்றோர்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.

குடும்பமாக வாழ திருமணம் தேவையில்லை என்பதை இவ்வாய்வு தெரிவிக்கிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ் - பாலைவனத் தூது

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza