பெண்கள் திருமணம் செய்வதற்கு ஏற்ற வயது 16 லிருந்து 18க்குள் என தெரிவித்திருக்கிறார் ஈரானிய அதிபர் அஹமதிநிஜாத். ஈரானிய பாராளுமன்றம் 2004 ஆம் ஆண்டு பெண்களின் திருமண வயதை 9 லிருந்து 15 ஆக உயர்த்தியது.
தற்போது ஈரானிய அதிபரின் இந்த அறிவிப்பு இளைய தலைமுறையை கவரலாம் என பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
ஆண்கள் திருமணம் செய்ய ஏற்ற வயது 19 லிருந்து 21 க்குள் என அஹமதிநிஜாத் தெரிவித்துள்ளதாக ஈரானிய பத்திரிகை மர்டோம்ஸலாரி குறிப்பிட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் குறைந்து வரும் அரசின் செல்வாக்கை உயர்த்துவதற்காக அதிபர் இவ்வாறு தெரிவித்திருக்கலாம் என ஈரானின் அரசியல் ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானில் பெண்களுக்கு முழுமையான உரிமைகள் வழங்கப்படவில்லை என பெண்ணியல் அமைப்புகள் கூறிவருகின்றன. கணவரின் அனுமதியின்றி பெண்கள் வேலை செய்யக் கூடாது மற்றும் வெளிநாடு செல்லக் கூடாது என்பவை பெண்களை முடக்கி வைத்திருப்பதாக அவை குற்றம் சாட்டியுள்ளன. ஈரானின் அரசியல் அமைப்புப்படி பெண் ஒருவர் அதிபராக முடியாது. பட்டதாரிகளில் 60 சதவிகிதமானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
NEWS : INNERAM.COM
0 கருத்துரைகள்:
Post a Comment