Sunday, October 10, 2010

புதுவலசை - பாபர் மஸ்ஜித் தீர்ப்பு முஸ்லிம்கலுக்கு பெரும் ஏமாற்றம்




புதுவலசையில் 08-10-2010 வெள்ளிக்கிழமை ஜும்மா பயான் அல் மஸ்ஜிதுல் ஜாமியா பள்ளியில் நடைபெற்றது. சகோதரர் அஹமது அமீன் மிஸ்பாஹி (பேசிமாம்) அவர்கள் ஜும்மாஉரை நிகழ்த்தினார்கள். தனது உரையில் பாபர் மசூதி தீர்ப்பு சட்டத்தை நம்பி 60 ஆண்டு காலம் பொறுமை காத்த முஸ்லிம்களுக்கு மிகப்பெறும் ஏமாற்றம். சிவில் சட்டத்தில் ஆதாரங்களையும், ஆவணங்களையும் வைத்து தீர்ப்பு அளிக்கவேண்டுமே தவிர நம்பிக்கையிலோ அல்லது மத உணர்வுகளின் அடிப்படையிலோ திர்ப்பளித்திருக்கூடாது என்றார். மெலும் கூறுகையில் நம் சமுதாயம் சிறுசிறு கருத்து வேறுபாடுகளை களைந்து ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றி பிடிக்கவில்லை எனில் நம் கண்ணியத்தை இழக்கநேரிடும் என்ற எச்சரிக்கை விடுத்ததோடு இறைவனிடம் இதற்க்காக தூஆ செய்தவர்ராக தனது உரையை நிறைவு செய்தார்.


செய்தி : அஸ்வர்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza