நீதிபதிகளை விசாரிக்க வகை செய்யும் மசோதா | |||||||
இந்திய உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் தலைமை நீதிபதிகளுக்கு எதிராக ஏதேனும் புகார்கள் எழுந்தால் அவைகளை விசாரிக்க வழிவகை செய்யும் புதிய சட்ட முன்வரைவு ஒன்று இந்திய நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு இந்திய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நீதித்துறை தரங்கள் மற்றும் பொறுப்பு சுமத்தும் மசோதா என்ற இந்த சட்ட முன்வரைவு, நீதித்துறையில் நீதிபதிகள் கடைப்பிடிக்கவேண்டிய தரம் குறித்து அளவுகோல்களை வகுப்பதுடன், அவர்கள் செய்யும் தவறுகளுக்கு அவர்களைப் பொறுப்பாக்குகிறது. நீதிபதிகள் மீது எழும் புகார்களை விசாரிக்க தேசிய அளவில் ஒரு கண்காணிப்புக் குழு அமைக்கப்படும். புகார் தெரிவிக்க விரும்பும் மக்கள் அதனிடம் புகார்களைக் கொடுக்கலாம். இந்தப் புகார்களை விசாரிக்க இரண்டு குழுக்கள் இயங்கும். உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீதான புகார்களை விசாரிக்க ஒரு குழுவும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீதான புகார்களை விசாரிக்க மற்றொரு குழுவும் இந்த சட்டத்தின் மூலம் அமைக்கப்படும் என்று செய்திகள் கூறுகின்றன. “சில நீதிபதிகளே இந்த நிலைக்குக் காரணம்” உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரசியல் சட்டத்தால் அமைக்கபெற்ற பதவிகளில் இருப்பவர்கள். இவர்கள் மீதான புகார்களை விசாரிக்க தற்போது அரசியல் சட்டத்தில் ‘இம்பீச்மெண்ட்’ ( அதாவது குற்றம் சாட்டி பதவி இறக்கும் வழிமுறை) என்ற முறைதான் இருக்கிறது. ஆனால் இந்த முறை போதாது மேலும் இது போன்ற சட்டங்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டதற்கு, சில நீதிபதிகளே காரணம், அவர்கள்தான் நீதித்துறையை இந்த நிலைக்கு கொண்டு வந்துவிட்டார்கள் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சிவசுப்ரமண்யம் கூறினார். தமிழோசைக்கு கருத்துத் தெரிவித்த முன்னாள் நீதிபதி, மாறிவிட்ட இந்த சூழ்நிலையில் இது போன்ற ஒரு அமைப்பு தேவையாகத்தான் இருக்கிறது என்று அவர் கூறினார்.
நீதித்துறையின் சுதந்திரம் இது போன்ற சட்டங்களால் குலைக்கப்படக்கூடிய அபாயமும் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். ஏனென்றால் உள்நோக்கம் கொண்ட புகார்கள் சுலபமாக எழுப்பப்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்ற்ரு அவர் குறிப்பிட்டார். நீதித்துறை என்ற அமைப்புக்கு பாதுகாப்பும் அவசியம் என்றார் அவர் |
Thursday, October 7, 2010
நீதிபதிகளை விசாரிக்க வகை செய்யும் மசோதா
லேபிள்கள்:
இந்தியா
0 கருத்துரைகள்:
Post a Comment