Saturday, October 9, 2010

பாதுகாப்பு கட்டமைப்புகளை ஏமாற்றக்கூடிய 20 குண்டுவீச்சு விமானங்களை வாங்குகிறது இஸ்ரேல்

டெல்அவீவ்.அக்.9:இஸ்ரேல் அமெரிக்காவிடமிருந்து 20 ஸ்டெல்த் பாம்பர் விமானங்களை வாங்குகிறது. இருநாடுகளுக்கிடையே 275 கோடி டாலர் ஒப்பந்த கையெழுத்திடப்பட்டுள்ளதாக செய்தி ஒன்று கூறுகிறது.


எஃப்-35 ரக விமானங்கள் 2015-2017 காலக்கட்டத்தில் வழங்குவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனை இஸ்ரேலின் பத்திரிகையான ஹாரட்ஸ் கூறுகிறது.

ஆயுத விற்பனை நிறுவனமான லோக்ஹீட் மார்டின் கார்ப்பரேசன்தான் எஃப்-35 விமானங்களை தயாரிக்கிறது.


கடந்த வியாழக்கிழமை இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. தற்போதைய பெரும்பாலான பாதுகாப்பு கட்டமைப்புகளையும் ஏமாற்றக்கூடிய திறனுடையதுதான் எஃப்-35 ரக விமானங்கள்.


அணுஆயுத திட்டத்தின் பெயரால் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என்ற ஊகங்கள் நிலவும் வேளையில்தான் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza