Tuesday, July 5, 2011

பாக்ஸ் நியூஸ் ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டது-ஒபாமா கொலை செய்யப்பட்டதாக செய்தி

fox_news_jpg_674298f
வாஷிங்டன்:அமெரிக்காவின் முன்னணி செய்தி சேனலான பாக்ஸ் நியூஸின் ட்விட்டர் அக்கவுண்டை ஹேக் செய்து அதிபர் ஒபாமா கொலை செய்யப்பட்டதாக செய்தி வெளியானது.

த ஸ்க்ரிப்ட் கிடீஸ் என சுயமாக தங்களை அழைத்துக்கொள்ளும் ஒரு குழுவினர், தாங்கள் பாக்ஸ் நியூஸ் ட்விட்டர் அக்கவுண்டை ஹேக் செய்ததன் பின்னணியில் இருப்பதாக தெரிவித்துள்ளது. ஒபாமாவை இரண்டு தோட்டாக்கள் தாக்கியதாக கூறும் ட்விட்டர் போஸ்டரில் செய்தியின் ஆதாரம் பாக்ஸ் நியூஸ் என குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து ஸ்க்ரிப்ட் கிடீஸின் ட்விட்டர் அக்கவுண்ட் முடக்கப்பட்டுள்ளது.

போதிய அனுபவம் இல்லாமல் பிறர் உருவாக்கும் ஹேக்கிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நபர்களை சைபர் உலகில் ’ஸ்க்ரிப்ட் கிடி’ என அழைப்பர். அதேவேளையில் பாக்ஸ் நியூஸ் ட்விட்டர் அக்கவுண்ட் மீதான சைபர் தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை. பாக்ஸ் நியூஸ் சேனலின் பழமையான கோட்பாட்டின் மீது ஏராளமான அமெரிக்கர்களுக்கு அதிருப்தி உள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza